யாழ், கிளிநொச்சி மாணவர்களை பயன்படுத்தி இராணுவம் செய்யும் வேலை

கிளிநொச்சி - வேப்படுகேணி பகுதியில் இராணுவத்தினரால் நடாத்தப்படவுள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கான ஏற்பாடுகள் குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் இராணுவத்தினர் மக்களையும் மாணவர்களையும் ஒன்று திரட்டி குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வேம்படுகேணி பகுதியில் யாழ். வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களையும் பொதுமக்களையும் பயன்படுத்தி குறித்த நிகழ்வுக்கான வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிகழ்வு நாளை மறுதினம் (27) நடைபெறவுள்ளது.
தேர்தல் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதித்தமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.<