பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடும் சிவாஜி!

ஆசிரியர் - Admin
பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடும் சிவாஜி!

தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்- தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்குகள் இரு தினங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு முதல் நாள் ஐந்து தமிழ் கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைகளை சமர்ப்பித்தவர்கள் எந்தவொரு கட்சியையும் சுட்டிக்காட்ட முடியாதவாறு விரும்பியவருக்கு வாக்களிக்களாம் என்ற தீர்மானத்தினை கொண்டு வந்ததன் மூலம் இலங்கையின் தேர்தல் முறையின் உண்மையான சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் உண்மையான சிங்கள பௌத்த வீரன் யார் என்ற தேர்தலே இன்று நடைபெறவுள்ளது. தற்போது கடும் போட்டி நிலவுகின்றது. சஜிதா? கோத்தபாயவா என்ற போட்டியே ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டியின் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதனையும் தரமாட்டோம் என்று அந்த மூவரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் மக்களின் வாக்குகளையும் பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மிகப்பெரும் தமிழின படுகொலைகளை நிகழ்த்திய கோத்தபாய ராஜபக்ஸவுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாது. அதேபோன்று தமிழின படுகொலைகளை செய்த இராணுவத்தினை காப்பாற்றுகின்றேன்.

தமிழின படுகொலைகளை செய்த இராணுவத்தளபதி என்னுடன் உள்ளார் அவரை பாதுகாப்ப அமைச்சராக்குவேன் என்று ஏட்டிக்கு போட்டியாக நிற்கின்றனர்.

இந்த நிலையில் தான் ஆக்கிரமிப்பாளர்களாக, அடக்குமுறையாளர்களாக இருக்கின்றவர்களின் கால்களை எங்களது மக்கள் முத்தமிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகள் தேவை.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் தரமாட்டோம்.சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிக்கப்படாத பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரப்பரவலாக்களை தருவோம் என்று கூறப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதனையும் தரவில்லை.மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை வைத்துக்கொண்டு புதிய அரசியலமைப்பினை இவர்களால் ஏன் கொண்டுவர முடியாமல் போனது. அன்று கொண்டு வர முடியாததை இன்று கொண்டு வரப்போவதாக கூறி ஏமாற்ற வேண்டாம்.

2000ம் ஆண்டு சந்திரிகாவினால் ஒற்றையாட்சிக்கு அப்பால் ஒரு தீர்வினை கொண்டு வந்தபோது அதனை நாடாளுமன்றத்திற்குள் தீக்கிரையாக்கியவர்கள் இந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியாகும்.

2005ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி தருவேன் என்று கூறியிருந்தார்.விடுதலைப்புலிகள் காலத்தில் சமஸ்டி தருவோம் என்றவர்கள் அவர்கள் இல்லாத நிலையில் எதனையும் தருவதற்கு தயாராகயில்லை.

சிங்கள் மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்க தயாராகயில்லாத நிலையிலேயே இரண்டு வேட்பாளர்களும் உள்ளனர்.” என கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு