மரநடுகை தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்!

ஆசிரியர் - Admin
மரநடுகை தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்!

வருடத்தில் எத்தனையோநாட்களில் நாம் பொங்கிஅமுதுஉண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றிவழிபடுகின்றதைப்பொங்கலேதமிழர்களின் தேசியப்பொங்கல் திரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

அதேபோன்றுஇவருடம் பூராவும் மரங்களைநடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.  கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அதுதமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச்செயற்பாடும்ஆகும்.  என்றுதமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணமரநடுகைமாதம்தொடர்பாகபொ. ஐங்கரநேசன்ஊடகங்களுக்கு இன்று (01.11.2019) அனுப்பி வைத்துள்ளஅறிக்கையிலேயே இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார். 

அந்தஅறிக்கையின் முழுவிபரம் வருமாறு;

வடக்குமாகாணசபை 2014 ஆம் ஆண்டுநிறைவேற்றியதீர்மானத்துக்குஅமைவாகஆண்டுதோறும் கார்த்திகைமாதம் வடமாகாணமரநடுகைமாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. தமிழ்மக்கள் இம்மாதத்தில் மரநடுகையை ஒருவழமையானசூழல் பேண் நடவடிக்கையாக அல்லாமல், உணர்வெழுச்சியுடன் கூடியஒருதமிழ்த் தேசியச் செயற்;பாடாகக்கொண்டாடவேண்டியதுஅவசியம் ஆகும்.

இன்றுஉலகளாவியரீதியில் பூமியின் வெப்பநிலைஅதிகரித்துக்காலநிலையில் பாதகமானமாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. 

கடும் வறட்சி,காலம் தப்பியபெருமழை,வேகமெடுக்கும் சூறாவளிகள் என்றுகாலநிலைமாற்றத்தின் விளைவுகளை நாமும் தற்போதுஅனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால் எமது எதிர்காலசந்ததியினரின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு   வெப்பநிலைஅதிகரிப்புக்குக் காரணமானவளியில் அதிகரித்துச் செல்லும் கரியமில வாயுவை உறிஞ்சிஅகற்றுவதற்குமரங்களின் நடுகையை ஒருபேரியக்கமாகமுன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்குநாம் இன்றுதள்ளப்பட்டுள்ளோம். 

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்குக்‘கார்’என்றுமழையின் பெயரைத்தன் பெயரில் கொண்ட கார்த்திகை மாதமே மிகப்பொருத்தமானமாதமாகும். 

இம்மாதப் பகுதியிலேயேவடக்கு கூடுதலானமழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இந்தப்புவியியற் காரணிக்கும் அப்பால்  ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகைமாதம் தனித்தவமான இன்னுமொருசிறப்பினைக்கொண்டுள்ளது. இம்மாதத்திலேயேமண்ணுக்காகமரணித்தவீரமறவர்களைக் கூட்டாகநினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது. 

மரவழிபாட்டைத்தமதுதொல்வழிபாட்டுமுறையாகக்கொண்டதமிழர்கள்இ இறந்தவர்களின் நினைவாக மரங்களைநடுகைசெய்து,அவற்றைஉயிருள்ளநினைவுச்சின்னங்களாகப்போற்றியபண்பாட்டுமரபையும் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பதுஒர்வெற்றுஅரசியற்சொல்லாடல் அல்ல் இது ஒரு இனத்தின் வாழ்புலம ; மொழி ,வரலாறு , பண்பாடு மதநம்பிக்கைகள் ஆகியஒன்றுடன் ஒன்றுதொடர்புபட்ட கூறுகளின் திரட்சியான ஒருவாழ்க்கைமுறையாகும். 

அந்தவகையில்இகார்த்திகைமாதமரநடுகைஎன்பதுசூழலியல் நோக்கிலும் தமிழ்த்தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடானஒன்றாகும்.

வருடத்தில் எத்தனையோநாட்களில் நாம் பொங்கிஅமுதுஉண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்றதைப்பொங்கலேதமிழர்களின் தேசியப்பொங்கல்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  அதே போன்று இவருடம் பூராவும்  மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாதமரநடுகையே தமிழர்களின் தேசியஅடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களைநடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அதுதமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும். எனவே,இப்புனிதகார்த்திகையில் ஆளுக்கொருமரம் நடுவோம்.நாளுக்கொருவரம் பெறுவோம்.

-இவ்வாறுஅந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு