ஐதேக கூட்டணியில் விஜயகாந் தலைமையிலான முற்போக்கு தமிழ் தேசிய கட்சி இணைந்துள்ளது

ஆசிரியர் - Admin
ஐதேக கூட்டணியில் விஜயகாந் தலைமையிலான முற்போக்கு தமிழ் தேசிய கட்சி இணைந்துள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 28 அரசியல் கட்சிகள், 30 பொது அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும்- புரிந்துணர்வு உடன்பாடு இன்று காலை கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கூட்டணியில், ஐக்கிய தேசியக் கட்சி, முற்போக்கு தமிழ் தேசிய கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தேசிய இயக்கம், ஜாதிக ஹெல உறுமய, தேசிய ஐக்கிய முன்னணி, சமசமாஜ கட்சி, உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைக்க இந்த புதிய கூட்டணி கடுமையாக பாடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு