அதிகாரபூர்வமற்ற முடிவு வெளிவருவதை தடுக்க நடவடிக்கை!
உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சமூக ஊடகங்களில் கசிவதைத் தடுக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குச்சீட்டுக்கள் எண்ணி முடிந்ததும் முடிவுகளை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து இலத்திரனியல் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேற்றையதினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர் சமூக ஊடக தளங்கள் வழியாக முடிவுகள் மக்களுக்கு கசியவிடாமல் தடுப்பதற்காக நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணைக்குழு இதன்போது தெரிவித்துள்ளது.
இறுதி அறிவிப்பு வழங்கப்படும் வரை வாக்கு எண்ணும் நிலையத்தில் உள்ள வேட்பாளரின் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையவர்கள் முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுவார்கள் என தன்னை வெளிப்படுத்த விரும்பாத தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நவம்பர் 16 ஆம் தேதி வாக்குப்பதிவு 4.00 மணிக்கு நிறைவடைந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் ஆணையம் அதே நாளில் இரவில் முடிவுகளை வெளியிடத் தொடங்கும்.