2250 மில்லியன் செலவில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம்..! வெள்ளத்தில் மிதக்கிறது..

ஆசிரியர் - Editor I
2250 மில்லியன் செலவில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம்..! வெள்ளத்தில் மிதக்கிறது..

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம் சிறிய மழைக்கே வெள்ளக்காடாக மாறி வருவது தொடா்பாக சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. 

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பூரண கண்கானிப்பின் கீழ் வேகமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டது. 

இதற்காக 2250 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 1950 மில்லியன் ரூபாய் பணம் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

மக்களின் தேவைக்காக விரைவாக நிர்மாணிக்கப்பட்ட இந்த விமான நிலையம் தொடர்ந்தும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றது.விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை உடன் சரி செய்வதற்கான 

நடவடிக்கைகளைஇதனால் இந்த குறைப்பாடுகளை சரிப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான எந்தவொரு தகுதிகளையும் கொண்டிருக்கவில்லை என குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு