50 வீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காது- வெளியானது கணிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக, சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது எனத் தெரிய வந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவை சின்னம் வெற்றி பெற்ற மாவட்டங்கள், அது தோல்வியடைந்த மாவட்டங்கள், பிரதான வேட்பாளர்களாக மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பெற்று கொண்ட வாக்கு வீதங்கள் என்பவற்றை இந்த கணிப்புக்கான மூலங்களாக அந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கு அமைய, மாவட்டங்களின் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய 2019ஆம் ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாச, தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பெறும் வாக்கு வீதத்தை தேசிய கொள்கை நிலையம் கணித்துள்ளது.
சஜித் பிரேமதாச 65 லட்சத்து 26 ஆயிரத்து 414 வாக்குகளை பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. இது 49.29 வீதமாகும். கோத்தபாய ராஜபக்ச 61 லட்சத்து 72 ஆயித்து 241 வாக்குகளை பெறுவார் எனவும், அது 46.62 வீதம் எனவும் அந்த நிறுவனம் கணித்துள்ளது. மூன்றாவது வேட்பாளர் 5 லட்சத்து 40 ஆயிரத்து 624 வாக்குகளை பெறுவார் எனவும் அது 4.08 வீதம் எனவும் எனவும் நிறுவனம் கணித்துள்ளது.