SuperTopAds

நான் போரை நடத்தினேன்- ராஜபக்சவினர் கேக் வெட்டினர்!

ஆசிரியர் - Admin
நான் போரை நடத்தினேன்- ராஜபக்சவினர் கேக் வெட்டினர்!

இறுதிப் போரை மாவிலாற்றில் ஆரம்பித்து, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

'இறுதிப்போரை மாவிலாறில் ஆரம்பித்து சம்பூர், வாகரை, தொப்பிகல முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன். சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூடச் சொல்லவில்லை. ஆனால் ராஜபக்சவினர் யுத்த வெற்றிகளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, மாதம் நாலாயிரம் பேரை படையில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி படையை பலப்படுத்தினேன். யாரும் எப்படியும் மோதலில் ஈடுபடலாமென கோத்தாபய நினைத்தார். ஆனால் மோதல் நடக்கும் இடத்தில் இடத்தை சுருக்கி பயங்கரவாதிகளை ஒழித்தோம்.

பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளை கொல்லாமல் இடங்களை பிடிப்பதில் அர்த்தமில்லை. நேரகாலம் குறிப்பிட்டே நான் பயங்கரவாதிகளின் இடங்களை கைப்பற்றினேன்.

ரை, கோட் அணிந்து கோத்தாபய உத்தரவிட்டால் படையினர் அதற்கேற்றபடி செயற்பட மாட்டார்கள். தளபதி ஒருவர் சொன்னால் தான் செய்வார்கள். அது தான் நடந்தது. எனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்கினால் நான் அதனை திறம்பட செய்வேன். வெளிநாடுகளுடன் தேவையற்ற ஒப்பந்தங்களை செய்யமாட்டேன்' என்றார்.