வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் - புத்தளம் வீதி!
கலா ஓயா பெருக்கெடுத்ததையடுத்து, புத்தளம் -மன்னார் பழைய வீதி, இன்று முதல் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மழை காரணமாக, கலா ஓயாவின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று கலா ஓயா பெருக்கெடுத்ததையடுத்து, குறித்த வீதியுடனான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் அலஹகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையடுத்து, மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி பயணிப்போரும், புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிப்போரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.