SuperTopAds

அமைதிப்படையில் இருந்து நீக்கப்படுவது வழக்கமானது தான்!

ஆசிரியர் - Admin
அமைதிப்படையில் இருந்து நீக்கப்படுவது வழக்கமானது தான்!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் இருந்து இலங்கை இராணுவம் நீக்கப்படுவது இயல்பான ஒரு நடவடிக்கையே என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ ஐக்கிய நாடுகள் சபை அமைதிப் படையணியில் இருந்து இலங்கை இராணுவம், வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம். 

இதனை தீர்க்க முடியும் என்றே நாம் கருதுகிறோம். பொதுவாக அமைதிப் படையணியிலிருந்து ஒரு நாட்டின் இராணுவத்தின் காலம் முடிவடைந்து விட்டால், அது தங்கியிருக்கும் நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படுவதே வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் தேவைக்கு இணங்க, மீண்டுமொரு அதே நாட்டுக்கோ அல்லது இன்னொரு நாட்டுக்கோ ஒரு இராணுவம் அனுப்பப்படும். சிலவேளை அவ்வாறு இடம்பெறாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. 

இலங்கை இராணுவமும் பல்வேறு நாடுகளில் பணியாற்றியதை அடுத்து, தேவை நிமித்தமாக இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட வரலாறும் உள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இலங்கை இராணுவம் முகம் கொடுத்துள்ளது என்றுதான் நாம் கூறவேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.