SuperTopAds

கூட்டமைப்பிற்குள் கொலைகாரன்! சிவசக்தி ஆனந்த குற்றச்சாட்டு

ஆசிரியர் - Editor II
கூட்டமைப்பிற்குள் கொலைகாரன்! சிவசக்தி ஆனந்த குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும், கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர்.

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிந்தவுடன் எமது கூட்டமைப்புடன் தாமும் வந்துவிடுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் தன்னிடம் கூறியுதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பாவக்குளத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடனும், பொட்டம்மானுடனும் பேசி ஆயுதப்பலம் உச்சத்தில் இருக்கின்ற நிலையில் எமது ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தன்மையையும், அரசியல் செயற்பாட்டையும், சர்வதேச ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் கொண்டு செல்வதற்கு பலமான அரசியல் தடம் வேண்டும் என ஊடகவியலாளர் தராக்கி சிவராமே முன்னின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக் காரணமாக இருந்தார்.

ஆனால் இன்று அந்த சிவராமை கொன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உள்ளர்கள். அந்த கட்சி சார்ந்த ஒரு இளைஞனும் இந்த பிரதேசத்தில் வேட்பாளராக உள்ளார். அந்த அப்பாவி இளைஞன் பாவம். அவர்களுக்கு இது தெரியாது.

இவ்வாறு சிவராமை கொன்றுவிட்டு கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள். இடைக்கால அறிக்கையை நாம் குழப்பியதாக இருக்ககூடாது.

அரசாங்கம் தேவைப்பட்டால் குழப்பட்டும் என்கின்றார்கள். ஆனால் அரசு இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் இடைக்கால அறிக்கைக்கான ஆதரவை பார்க்கின்றது.

கடந்த ஒரு மாதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இரண்டு கோடி அரசிடம் வாங்கியதாக நான் தெரிவித்து வருகின்றேன். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது அதை மறுக்கவில்லை. நான் சவால் விடுகின்றேன்.

முடிந்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது இதை மறுக்கட்டும். அடைக்கலநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி ஆம்கட்சிக்கு வழங்கப்படுகின்ற பதவி. ஆனால் அவர் இன்று கூறுகின்றார் தாங்கள் அரசாங்க கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. அவ்வாறெனில் நீங்கள் இந்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு வாருங்கள்.

சித்தார்த்தன் வட மாகாண முதலமைச்சரிடம் வட மாகாணசபை தேர்தலில் உங்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெலோவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் என்னிடம் தெரிவித்தார். இந்த தேர்தல் முடிந்த பின்னர் உங்களுடன், நாங்களும் வந்துவிடுவோம் என்றார்.

இவ்வாறான நிலையில் தான் கூட்டமைப்பு உள்ளது. கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளுக்கு இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் இறுதி தேர்தல் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.