கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கனடா - ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கள் இருவர் கைது!

ஆசிரியர் - Admin
கனடா - ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கள் இருவர் கைது!

கனடா- ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குயின் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இருவர் குறித்த நபருடனும் வரிசையில் காத்திருந்த பிறிதொருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, வெளியே இருந்து வந்த இருவரில் ஒருவர் தனது மேற்சட்டையை உயர்த்தி மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியைக் காண்பித்து எச்சரித்துள்ளார். மோதல் தீவிரமடைந்தபோது, ஒருவர் அடித்து நிலத்தில் வீழ்த்தப்பட்டதாகவும், இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களைத் துரத்திச் சென்ற சந்தேக நபர்கள், தப்பியோடியோர் மீது துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்தப் பகுதி ஒழுங்கை ஒன்றினூடாக ஓடிக் கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஜேய்சன் ஜெயகாந்தன் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக ரொறன்ரோ பொலிசாரால் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

Radio
×