SuperTopAds

சி.பி.ஐ, கோர்ட்டில் ப.சிதம்பரம் ஆஜர் - நாளைவரை காவல் நீட்டிப்பு

ஆசிரியர் - Admin
சி.பி.ஐ, கோர்ட்டில் ப.சிதம்பரம் ஆஜர் - நாளைவரை காவல் நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்கார்த்தி சிதம்பரம் ள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அவரது விசாரணை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சிதம்பரத்தை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. 

சிதம்பத்தின் விசாரணை காவலை இனியும் நீட்டிக்க கூடாது. அப்படியே விசாரணை காவலை நீட்டித்தாலும் அவருக்கு தற்போது 74 வயதாவதால் திகார் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட கூடாது. வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்குமாறு அனுமதி அளிக்க வேண்டும் என இன்று கபில் சிபல் வாதாடினார்.

இதுகுறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அணுகி முறையிடுமாறு அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட் அந்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க மறுத்து விட்டால் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் வரும் 5-ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதியளித்தது. அவரை திகார் சிறைக்கு அனுப்ப கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். 

அவரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்குமாறு சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக சி.பி.ஐ. உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் நாளை (3-ம் தேதி) முடிவை தெரிவிப்பதாக நீதிபதியிடம் அரசுதரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்துக்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்துள்ளன. அந்த ஆவணங்களை சீலிட்ட உறையில் வைத்து நீதிபதிடம் அளிப்பதற்கும் அவர் அனுமதி கோரினார்.

இதைதொடர்ந்து, இந்த ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்த சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரணை காவலை நாளைவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.