முக்கிய நபா் ஒருவரை கொலை செய்ய சதி செய்தாரம், ஆயுதமும் இருந்ததாம்..! மருத்துவா் சிவரூபன் கைதுக்கு இதுவே காரணமாம்..
தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தமை மற்றும் சட்டவிரோமான ஆயுதம் வைத்திருந்தமை, முக்கிய நபா் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை போன்றனவே வைத்தியா் சி.சிவரூபன் கைது செய்யப்பட காரணம் என பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் மருத்துவ அதிகாரி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின ரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரவு 9.30 மணியவில் பளை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இரவு 10.30 மணிமுதல் மருத்துவமனை
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது. அதன்பின்னர் அங்குள்ள மருத்துவ அதிகாரி ஒருவரிடம், மருத்துவ அதிகாரி சிவரூபனின் பொறுப்புக்களை ஒப்படைக்கச் செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்,
மருத்துவமனையின் நடவடிக்கைளில் தம்மால் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை என் பதை உறுதிப்படுத்திக் கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு மருத்துவ அதிகாரி சிவரூபனை அழைத்துச் சென்றனர் என்றும் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மருத்துவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கர வாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இந்தக் கைது நடந் துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் அவசரகாலச் சட்டம்
நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.அதன்பின்னர் நாட்டில் பாதுகாப்பு சீரான நிலைமைக்கு வந்துள்ளது, இனிமேல் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அவர் பல தடவை கள் தெரிவித்திருந்தபோதும், ஒவ்வொரு மாதமும்
அரச தலைவரால் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டு வருகின்றது.