கொய்யாப் பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவன் பாிதாபகரமாக உயிாிழந்த சோகம்..!

ஆசிரியர் - Editor
கொய்யாப் பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவன் பாிதாபகரமாக உயிாிழந்த சோகம்..!

பொத்துவில் பகுதியில் கொய்யாப் பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவன் மரத்திலிருந்து வழுகி கிணற்றில் விழுந்து உயிாிழந்துள்ளான். 

பொத்துவில் - ஆர். எம். நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவனொருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் அருகில் காணப்படும் 

கொய்யா மரத்தில் ஏறி பழங்களை பறிக்க முற்பட்ட போதே குறித்தச் சிறுவன் இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

மொஹமட் ஷியாத் மொஹமட் ஹதீத் எனப்படும் நான்கரை வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் மரண பரிசோதனைகள் 

பொத்துவில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×