தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்!

ஆசிரியர் - Admin
தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்!

தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான- பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

நேற்று இராணுவத்தின் விசேட படையணிக்கு ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணமளிப்பதை அடையாளப்படுத்தும் விருது விழாவில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ' குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் பாதிக்கப்படத்தக்க கருத்துக்களை எவரும் வெளியிடக்கூடாது என்றார்.

தேசிய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் ஆற்றிவரும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, ஒட்டுமொத்த தேசமும் என்றும் படையினருக்கு கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கீழ்த்தரமான அரசியல் தேவைகளுக்காக படையினரின் அளப்பரிய சேவையினை குறைத்து மதிப்பிட இடமளிக்க முடியாதெனவும் அன்று இராணுவத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியவர்களே இன்று குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய அத்தகைய முறையற்ற கருத்துக்களை வெளியிடுதல் தொடர்பில் தான் பெரிதும் கவலையடைவதாக தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பினை உயரிய அளவில் உறுதி செய்திருப்பதோடு மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலங்கையில் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு