குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா!

ஆசிரியர் - Admin
குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா!

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலை இலக்கு வைத்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார்.

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகளை அடுத்து அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

இலங்கை - அமெரிக்க குடியுரிமையை கொண்ட கோத்தபாய, தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்ததாக பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அமெரிக்காவினால் வெளியிட்ட பட்டியலில் கோத்தபாய தனது குடியுரிமையை நீக்கிக் கொள்ளப்பட்டதாக உள்ளடக்கப்படவில்லை. 

இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த பட்டியல் வெளியாகுவதற்கு மேலும் சில மாதங்களாகும். அதற்குள் இலங்கையில் ஜனாதிபதி வேட்பு மனு தாக்கல் இடம்பெற்று விடும்.

இந்நிலையில் கோத்தபாயவினால் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்காக தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் போலியானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மையாக ஆவணங்கள் என காட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்களும் போலியானதென தெரியவந்துள்ளது.

கோத்தபாயவினால் தான் ஒரு இலங்கை குடியுரிமை பெற்றவர் என வெளிப்படுத்துவதற்கான போலி தேசிய அடையாள அட்டை மற்று கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சமகால அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் உதவியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Radio
×