உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை!

ஆசிரியர் - Admin
உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை!

இலங்கை கண்டியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு ‘டிக்கிரி’ என்கிற மிகவும் உடல்நலிவடைந்த யானையைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யானை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அதன் பிரமாண்டமும், கம்பீர தோற்றமும் தான். ஆனால், அதற்கு நேர்மாறான தோற்றத்தில் எலும்பும் தோலுமாக ஒரு யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது பார்ப்போரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இலங்கையின் கண்டியில் உள்ள ஒரு கோவிலில் புத்தரின் பல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதற்காக நடத்தப்படும் பேரணியில், நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும். யானைகளுக்கு அலங்காரம் செய்து, இந்தப் பேரணியில் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வைப்பார்கள்.

‘பாவம் அந்த யானை.. விட்டுவிடுங்கள்’ : அன்பை போதித்த புத்தர் கோவில் திருவிழாவில் இது தேவைதானா ? 

இந்தப் பேரணியில் பங்கேற்கும் ’டிக்கிரி’ என்கிற யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிக்கிரி என்ற 70 வயதான எலும்பும் தோலுமாக உள்ள இந்த யானையை திருவிழா பேரணியில் பயன்படுத்தக் கூடாது என தாய்லாந்தைச் சேர்ந்த 'Save elephant' என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருவிழாவில் இந்த யானையை நடக்க வைத்து கொடுமைப்படுத்தக்கூடாது என சமூக வலைதளங்களில் யானையின் புகைப்படத்துடன் பிரசாரம் நடத்தி வருகிறது 'save Elephant' அமைப்பு.

‘பாவம் அந்த யானை.. விட்டுவிடுங்கள்’ : அன்பை போதித்த புத்தர் கோவில் திருவிழாவில் இது தேவைதானா ? 

இதுகுறித்து 'save Elephant' அமைப்பினர் , “எலும்பும் தோலுமாக உள்ள டிக்கிரியின் உடல் மக்களுக்குத் தெரியாமல் பட்டாடைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை மிகமோசமாக இருக்கும் டிக்கிரி மக்களின் கூச்சல், பட்டாசு சத்தங்களுக்கு இடையே நடத்திச் செல்லப்படுகிறது.

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய திருவிழா, யாருக்கும் கஷ்டத்தைத் தராததாக இருக்கவேண்டும். டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசிர்வாதம் எப்படி சிறந்ததாக இருக்கமுடியும்? எந்தத் தீங்கும் செய்யாமல் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றுவது புத்தரின் வழி. அதைப் பின்பற்றவேண்டும்” எனக் வலியுறுத்தியுள்ளனர்.

உலகில் பல விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. முன் எப்போதையும்விட காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நாம் உணர்ந்துவரும் இச்சூழலில்தான் விலங்குகளையும், காடுகளையும் காப்பாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


Radio