சம்பந்தன் மாவைக்கு பனை அபிவிருத்தி நிதியம் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்கொடி!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பனை அபிவிருத்தி நிதியத்திற்கான நிதி வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறவிருந்த நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றியிருந்தது என்பது யாவரும் அறிந்ததே
இது இவ்வாறு இருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேரிடியான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும்,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் ஒருவருக்கு தலா 100 மில்லியன் ரூபா வீதம் பிரதமர் அவர்களால் பனை அபிவிருத்தி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை கேள்விப்பட்ட ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லையெனவும் திருகோணமலைக்கும் யாழ் மாவட்டத்திற்குமே இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது உங்கள் இருவருக்கும் நிதியை பெற்றுதருவதற்காகவா நாங்கள் அரசை காப்பாற்ற வாக்களித்தோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்தி வெளிவந்துள்ளது.
இவ்வாறன நிலையில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்பெரலியா நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பல அபிவிருத்தி வேலைகளை கிராமங்களில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிரமா அபிவிருத்தி சங்கங்களினூடாக வேலைகளை பெற்று அவ் சங்கங்களுக்கு சிறுதொகை பணத்தை கொடுத்துவிட்டு தமிழரசு கட்சியின் இளைஞர் அணி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஊடாக கம்பெரலியா வேலைகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு செய்யப்படும் வேலைகள் உரிய தரத்தில் இல்லாமல் வீதிகள் கட்டிடங்கள் என்பன ஒழுங்கான முறையில் திருத்தம் செய்யப்படாமல் மக்களின் வரிப்பணம் வீண்விரயம் செய்யப்படுகின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.