த. தே. கூ அரசாங்கத்திற்கு விலைபோய்விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது!

ஆசிரியர் - Editor II
த. தே. கூ அரசாங்கத்திற்கு விலைபோய்விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாத தமிழ் தேசிய் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு விலைபோய்விட்டதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அளிக்கப்படும் வாக்குகள் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டதை பறைசாற்றும் என்று தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைரட்ணம் சாடியுள்ளார்.

மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் கட்சி அலுவலகம் நேற்று முன்தினம“ திங்கட்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைரட்ணம், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலானது தமிழ் மக்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு தேர்தல் என தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்தால் மட்டுமே தமிழ் மக்களின் பெரும்பான்மையை அந்தப் பகுதியில் நிரூபிக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழரசுக்கட்சி தாம் கூறியதை செவிமடுக்காமல் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு விலை போயுள்ளதாக குற்றம் சுமத்திய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாராளர் துரைரட்ணம், தமிழ் தேசிய கூட்டமைப்பு இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டது என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு