SuperTopAds

வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Admin
வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் அவதானிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

அதிக வேகத்தில் உந்துருளியில் சென்ற குறித்த இளைஞர் வேககட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் விழுந்து இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.