இந்த 5 விசயம் இருந்தாபோதும்..! உங்களுக்கு காதல்தோல்வி வராதாம்..

ஆசிரியர் - Editor I
இந்த 5 விசயம் இருந்தாபோதும்..! உங்களுக்கு காதல்தோல்வி வராதாம்..

அதற்கு முந்தைய தலைமுறையோ, காதலியின் நினைவாக வாழ்வது அல்லது தாடி வைத்து சாவது போன்ற முயற்சிகளை செய்து வந்தனர். அதற்கு முந்தைய தலைமுறையினரோ, தேவதாஸை முன்மாதிரியாக கொண்டனர். அதற்கு முந்தைய தலைமுறையினரோ, ’அடைந்தால் மாகாதேவி இல்லையேல்; மரண தேவி’ என்று முத்திரை பதித்தினர்.

காதல் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. அதேபோல், காதல் தோல்வியும் பொதுவானதுதான். காதலில் தோல்வியடைந்தவர்களை தேற்றுவதற்காக, 'காதலில் தோற்பவன்; வாழ்க்கையில் வெற்றிபெறுவான்' என்ற தாரக மந்திரத்தையெல்லாம் 90’s கிட்ஸுகள் உருவாக்கி வைத்திருந்தனர். அதற்கு முந்தைய தலைமுறையோ, 

காதலியின் நினைவாக வாழ்வது அல்லது தாடி வைத்து சாவது போன்ற முயற்சிகளை செய்து வந்தனர். அதற்கு முந்தைய தலைமுறையினரோ, தேவதாஸை முன்மாதிரியாக கொண்டனர். அதற்கு முந்தைய தலைமுறையினரோ, ’அடைந்தால் மாகாதேவி இல்லையேல்; மரண தேவி’ என்று முத்திரை பதித்தினர். காதல் தோல்வி நமது தலைமுறையினரை இப்படியெல்லாம் ஆட்டி படைத்துள்ளது. 

இந்நிலையில், காதல் தோல்வியில் இருந்து மீள சில எளிய வழிமுறைகளை தருகிறோம். ட்ரை பண்ணுங்க. காதல் தோல்வியில் இருந்து வெளிய வாங்க.. 

 1.ப்ளாக் செய்யுங்கள் நடந்து முடிந்த பழைய விஷயங்களைத் தோண்டி ஆராய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் உங்கள் முன்னால் காதலனை/காதலியை நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் உங்கள் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்து விடுங்கள். 

அவர்களை சார்ந்து வாழாமல் நீங்கள் தனியாக சுதந்திரமாக உணர்வதற்கு, அவர்களுடன் இருக்கும் சமூக ஊடகத் தொடர்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.

2.உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள் நீங்கள் சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு காட்ட வேண்டாம். கோபம், சோகம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை முதலில் நீங்கள் அதையதை அப்படியே வெளிக்காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் அந்த உணர்ச்சிகளில் இருந்து எளிதில் வெளிவர முடியும். வருந்துவதும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான். 

அதனால் அந்த ஆறாப்புண் விரைவில் குணமடையும்.

3.பரிசுப் பொருட்களை தூக்கி எறியுங்கள் காதலித்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களைத் தூக்கியெறிவது தான் நல்லது. அதை பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதெல்லாம் வீண். அது சிலருக்கு தன்னை குற்றவாளியாகவும் தன்னுடைய இயலாமையையும் அல்லது தான் காதலித்த நபர் மீது கோபத்தையும் வன்மத்தையும் மட்டுமே அதிகரிக்கச் செய்யும். 

4.பிடித்த ஆடைகளை அணியுங்கள் வழக்கமாக உங்களுக்கு பிடித்ததை விட உங்களுடைய காதலருக்கு/காதலிக்கு பிடித்தது போலத்தான் அதிகமாக ஆடைகள் அணிந்திருப்பீர்கள். நடை பாவனை இருந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு முதலில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரி ஆடைகளை அணியுங்கள். 

புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை மாற்றிக் கொள்ளுங்கள்.

5.நண்பர்களிடம் செல்லுங்கள்  இதுவரையிலும் காதலனுடன்/காதலியுடன் மட்டுமே வெளியில் சென்று, நண்பர்களையெல்லாம் மறந்து ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருப்பீர்கள். அதனால் மீண்டும் நண்பர்களைத் தேடிப் போங்கள். இதுவரை வாழ்ந்த ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு