சஜித்தே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்: மங்கள தகவல்

ஆசிரியர் - Admin
சஜித்தே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்: மங்கள தகவல்

ஶ்ரீலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்த வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சியினால் வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். குறித்த வேட்பாளர் வெற்றிபெறுபவராக இருத்தல் வேண்டும் என்ற கருத்துக்கள் கட்சிக்குள் காணப்படுகின்றன.

இந்நிலையில் கட்சியினுள் அத்தகைய அம்சங்களை கொண்ட ஒரே நபராக சஜித் பிரேமதாச காணப்படுகின்றார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய என கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆசீர்வாதத்துடன் சஜித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முன்மொழிவதாக” அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Radio
×