சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய வழிமுறைகள்..!

ஆசிரியர் - Admin
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய வழிமுறைகள்..!

கறிவேப்பிலையை காய வைத்து பொடித்து வைத்து கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டுவர இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும், இதனால் பரம்பரையாக ஏற்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான்  ‘டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் ‘சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். 

மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். இந்நிலையில், மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதைவிட உணவையே மருந்தாக எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். 

1.பாகற்காய் : 


தினம் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரையின் அளவு குறையும். உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்து வருவது நல்லது.

2.கொய்யா : 


சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் தினம் 2 கொய்யா சாப்பிட்டு வருவது நல்லது. இது நம் உடலில் சர்க்கரையின் அளவு சமநிலையில் வைக்க உதவுகிறது. மேலும் 5 கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து 60 மில்லி காலை, மாலை இரு வேளை குடித்து வர சர்க்கரையின் அளவு குறையும்.

3.கறிவேப்பிலை : 


கறிவேப்பிலையை காய வைத்து பொடித்து வைத்து கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டுவர இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும், இதனால் பரம்பரையாக ஏற்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

4.முருங்கை இலை: 


முருங்கை இலையை கீரையாக பொரியல் செய்து உணவில் உண்டுவர இதில் அஸ்கார்பிக் ஆசிட் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறைகிறது.

5.மாந்தளிர் : 


மாமரத்தினுடைய தளிர் இலை களை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி பொடி எடுத்து கசாயமிட்டு தினமும் காலையில் உணவிற்கு முன் அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

6.நாவல் : 


நாவல் பழக்கொட்டைகளை காய வைத்து நன்கு இடித்து பொடிசெய்து தினம் ஒரு தேக்கரண்டி அளவு காலை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

7.வெந்தயம் : 


வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் வெந்தயக்கீரையை வாரம் 2 முறை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு