ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு!

ஆசிரியர் - Admin
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.     

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடுவது என்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் இந்த யோசனை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்திருந்தது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Radio
×