மயானத்திலிருந்து சடலங்களை தோண்டி எடுத்த கும்பலால் பரபரப்பு..! மயானத்திற்கு பாதுகாப்பு.. விசாரணை தீவிரம்.
நிக்கவெஹொற - பல்லேவல பகுதியில் முஸ்லிம் மையவாடி ஒன்றில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரு புதைகுழிகள் தோண்டப் பட்டு சடலத்தை எடுக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கலேவல பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட போது கவேவெல பல்லேவெல பகுதியில் முஸ்லிம் மயானத்தில் கடந்த 28 நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த சடலமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
குறித்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ள அதே இடத்திற்கு அருகில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன குறித்த சடலம் முருங்கை பயிர் செய்யப்பட்டிருந்த பகுதியில்
மண்ணால் மூடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மர்மான சடலம், கலேவெல – பல்லேவெல பகுதியை சேர்ந்த 50 வயதான ஹபிபி லெப்பை மன்சூர் என்பவரின் சடலம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சடலத்தை தோண்டி எடுத்தது யார்?
எதற்காக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை. எனினும் சடலம் தொடர்பில் மீளவும் நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சடலம் மீட்கப்பட்ட இடம் மற்றும் மயானத்திலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.