வடக்கு ஆளுநா் சுரேன் ராகவனுக்கு ஆவாகுழு எழுதிய கடிதம்..! சந்திக்க முடியாமைக்கு கவலையும் தொிவிப்பு..
”ஆவா” குழுவை பாதுகாப்பு ஒழுங்குகள் எதுவுமில்லாமல் அவா்கள் விரும்பும் இடங்களில் சந்தித்து பேச தான் தயாராக இருப்பதாக ஆளுநா் அறிவித்திருந்த நிலையில், ஆளுநருக்கு ஆவா குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் தாம் ஆளுநரை சந்திக்க முடியாமைக்கு வருந்துவதாகவும், தம்மை அறிமுகப்படுத்தினால் பொலிஸாாினாலும், ஊடகங்களாலும் தமது உாிமைகள் மீறப்படும் எனவும்,
தமது அமைப்பு 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதெனவும், தற்போது வடமாகாணம் முழுவதும் தாம் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளதுடன், தமது பிரதான இலக்கு சமூக சீரழிவுகளை தட்டிக்கேட்பதும், சமூகத்தை பாதுகாப்பதுமே என கூறப்பட்டுள்ளது.