அமைச்சருக்கு வீடு கட்டுவதற்கு 199 லட்சம் செலவு..! செய்மதி தயாாித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்வதக்கு ஒரு வீடில்லை தொியுமா?

ஆசிரியர் - Editor I
அமைச்சருக்கு வீடு கட்டுவதற்கு 199 லட்சம் செலவு..! செய்மதி தயாாித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்வதக்கு ஒரு வீடில்லை தொியுமா?

இலங்கையின் முதலாவது செய்மதி அண்மையில் விண்வெளிக்கு ஏவப்பட்டிருந்தது. குறித்த செய்மதியை உருவாங்கிய இளம் விஞ்ஞானிகள் தொடா்பில் இன்று நாடாளுமன்றில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,இந்த செய்மதியை அமைத்த தரிந்து தயாரத்ன என்ற இளைஞன் மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வாழ்வதற்கு தகுதியான வீடு கூட இல்லை. தரிந்துவின் தந்தை சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அமைச்சர் கிரிஎல்லவின் வீட்டை நிர்மாணிக்க 199 லட்சம் ரூபாய் செலவிட்டதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. 

எனினும் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இளைஞனுக்கு எந்தவொரு உதவிகளும் செலவிடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கையை சேர்ந்த இரு பொறியியலாளர்களால் ராவணா-1 தயாரிக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி சுற்றுவட்டத்தில் ராவணா-1 செய்மதி சேர்க்கப்பட்டடிருந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு