அதிகஸ்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு இடை நிறுத்தம்..! பாிதவிக்கும் ஆசிாியா்கள்..

ஆசிரியர் - Editor I
அதிகஸ்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு இடை நிறுத்தம்..! பாிதவிக்கும் ஆசிாியா்கள்..

கிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புகள் அற்ற நிலையில் காணப்படும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு 2500ரூபா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி குறித்த அதிகஸ்ட பிரதேசப்படி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்திலிருந்து எவ்வித முன்னறிவித்தலுமின்றி அதிகஸ்ட பிரதேசப்படி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில் அதிகஸ்ட பிரதேசமாக கொள்ளப்பட்டு வந்த அக்கராயன், ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், கோணாவில், 

யூனியன்குளம், கராஞ்சி, வலைப்பாடு, ஜெயபுரம் போன்ற பகுதிகளில் காணப்படும் பிரதேச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த இந்த பணம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரதேசங்களில் வீதி வசதிகள், வங்கி சேவைகள், மருத்துவமனை, உரிய சீரான போக்குவரத்து சேவை, 

பிரதேச செயலகம், தபால் நிலையம் என்பன மற்றும் பிரதானமாக வெளிமாவட்ட ஆசிரியர்கள் தங்கி கற்பிப்பதற்கான ஆசிரியர் விடுதிகள் என்பன இல்லாத நிலையிலேயே இந்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

அப்பகுதிகளுக்கு வீதி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி அதிகஸ்டப் பிரதேசப்படி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், 

இந்த விடயம் குறித்து பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு