SuperTopAds

இராணுவ தளபதியாகும் சவேந்திர சில்வா..! தமிழா்களின் கதை என்ன..?

ஆசிரியர் - Editor I
இராணுவ தளபதியாகும் சவேந்திர சில்வா..! தமிழா்களின் கதை என்ன..?

இராணுவ பிரதானியாக பதவி வகிக்கும் சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திாிபால சிசேனா மேலும் 6 மாதங்கள் கால நீடிப்பு வழங்கியுள்ளாா். 

எதிர்­வரும்  21 ஆம் திகதி சவேந்­திர சில்­வா­வுக்கு 55 வயது பூர்த்­தி­யாகும் நிலை­யி­ லேயே, அவ­ருக்கு எதிர்­வரும் டிசம்பர் 31 ஆம் திக­தி­வரை 

ஜனா­தி­பதி பதவி நீடிப்பு வழங்­கி­யுள்ளார். இந் நிலையில் 6 மாதகால பதவி நீடிப்பு வழங்­கி­யுள்ள ஜனா­தி­பதி, சவேந்திர சில்­வாவை 

எதிர்­வரும் ஆகஸ்ட் முதல் நான்கு மாதங்­க­ளுக்கு இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக பாது­காப்பு வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

தற்­போ­தைய இரா­ணுவத் தள­ப­தி­யான லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்­க­ வுக்கு ஏற்­க­னவே ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ள சேவை நீடிப்பு எதிர்­வரும் 

ஆகஸ்ட் 18 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டை­கின்­றது. அதன் பின்னர் மகேஸ் சேன­நா­யக்க ஓய்­வு­பெறும் நிலையில், இரா­ணு­வத்தின் இரண்டாம் நிலையில் உள்ள 

மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவ தள­ப­தி­யாகும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது வன்னி கட்­டளை அதி­கா­ரி­யாக 

செயற்­பட்­டி­ருந்த சவேந்­திர சில்­வா­வுக்கு எதி­ராக மனித உரிமைமீறல்  குற்றச்சாட்டுக்கள் பல சர்வ தேச அமைப்புக்களால் 

முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.