தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை..? குண்டு வெடிப்பு நடந்தபோது அங்கே தங்கியிருந்தவா்கள் யாா்..?

ஆசிரியர் - Editor I
தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை..? குண்டு வெடிப்பு நடந்தபோது அங்கே தங்கியிருந்தவா்கள் யாா்..?

உயிா்த்த ஞாயிறு தினத்தன்று பல இடங்களில் தாக்குதல் நடந்தபோதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிக்காமைக்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பியிருக்கும் தயாசிறி ஜயசேகர,

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களுடன் வெளிநாட்டு சக்தி களுக்கு நெருங்கிய தொடா்புகள் உள்ளதாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் அவர் கூறியுள்ளாா். 

மேலும் தெரிவிக்கையில், இந்த பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஓர் வெளிநாட்டு சக்தி செயற்பட்டுள்ளது என்பதனை நான் தெளிவாக கூறுகின்றேன்.

இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதனை நாம் எதிர்காலத்தில் கூறுகின்றோம். ஈஸ்டர் தினத்தன்று ஏனைய இடங்களில் தற்கொலைதாரிகள் தாக்குதலை நடாத்திய போதிலும் 

தாஜ் சமுத்ராவில் குண்டு வெடிக்காமைக்குக் காரணமுண்டு எனவும் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் யார்? என தேடிப் பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும் எனவும் 

அவர் தெரிவிக்கிறார். குறித்த காரணத்திற்காகவே அங்கு நடாத்தப்பட வேண்டிய தாக்குதல் கைவிடப்பட்டதாக தயாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மட்டுமா பொறுப்பு சொல்ல வேண்டும் அவர் இல்லாதபட்சத்தில் அது குறித்து தீர்மானம் எடுக்க கூடிய எவரும் இருக்கவில்லையா? 

என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்காலத்தில் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தது யார் என்பது தொடர்பான தகவல் தெளிவாக வெளியாகும் என்றும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு