தலைவாின் புண்ணியத்தில் சொப்பிங் பைகளுடன் வந்தவா்கள் கோடீஸ்வரா்கள்..! செல்வம் சொன்ன கதை..

ஆசிரியர் - Editor
தலைவாின் புண்ணியத்தில் சொப்பிங் பைகளுடன் வந்தவா்கள் கோடீஸ்வரா்கள்..! செல்வம் சொன்ன கதை..

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரனின் புண்ணியத்தால் சொப்பிங் பைகளுடன் வந்தவா்கள் கோடீஸ்வரா்கள் ஆகிவிட்டனா். என  நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளாா். 

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை 

முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடமுடியாது என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரின் கருத்தானது தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சரியானதே என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் இலட்சியத்துடன் இலக்குகளை தேர்ந்தெடுத்து போராட்டத்தை ஆயுத ரீதியாக கொண்டு சென்றவர்கள் எனவும் அவர்கள் எடுத்த முடிவு 

தீர்க்கதரிசனமாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Radio
×