26 இராணுவத்தினரை கொலை செய்தனராம்..! 3 முன்னாள் போராளிகளுக்கு எதிராக வழக்கு..
போா் நடைபெற்ற காலத்தில் 26 இராணுவத்தினரை கொன்றதாக தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் 3 பேருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி 18 கடற்படை அதிகாரிகள்,
8 இராணுவத்தினரென விடுதலைப் புலிகளின் தடுப்பில் இருந்த 26 படையினர் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்.புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் புலனாய்வு முகாமை கைவிடும் நிலையில்
குறித்த சம்பவம் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விசாரணையை ஆரம்பித்தது.
இந்நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் மூவரை குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து, விளக்கமறியலில் வைத்து தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையிலேயே அவர்கள் மீது, தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.