ஐஎஸ் தீவிரவாதத்தை அழிக்கக் கோரி யாழ். முஸ்லிம்கள் போராட்டம்!

ஆசிரியர் - Admin
ஐஎஸ் தீவிரவாதத்தை அழிக்கக் கோரி யாழ். முஸ்லிம்கள் போராட்டம்!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சகோதர உறவுகளுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சார்பில் அஞ்சலிகளை முன்வைக்கும் வகையிலும் குறித்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தினால் 2019.05.31 வெள்ளிக்கிழமை ஆராதணையின் பின்னர் மதியம் 1.00 மணியளவில் முஸ்லிம் கல்லூரி வீதியும் - நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்று முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. அவையாவன. 

• உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்நீர்த்த மற்றும் பாதிக்கப்பட்ட எம் சகோதர உறவுகளுக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

• ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை முற்றிலும் நிராகரிக்கின்றோம். அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை வண்மையாக கண்டிக்கின்றோம். 

• குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் அரசினால் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு உச்சபற்ச தண்டணை வழங்கப்படவேண்டும். 

மேற்குறித்த தீர்மானத்தினை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்துடன், சிலரால் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. அந்தவகையில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக சமூக செயற்பாட்டாளர் என்.எம். அப்துல்லாஹ் தனது கருத்துக்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து உலமாக்கள் சார்பாக மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் தலைவரும் ஆசிரியருமான மௌலவி எம்.ஏ. பைசல் (மதனி) அவர்களும், மக்களி பிரதிநிதிகள் சார்பாக யாழ் மாநகரசபை உறுப்பினர் கௌரவ எம்.எம்.எம். நிபாஹிர் அவர்களும், பள்ளிவாயில் நிர்வாகிகள் சார்பில் மொஹிதீன் ஹமீதிய்யா கே.கே.எஸ் பள்ளிவாசல் தலைவர் ஜனாப் எம்.யூ.எம். தாஹிர் அவர்களும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமது கைகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், சிறுபான்மை மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தாதே, பயங்கரவாதத்தை ஒழிப்போம். அரசே, இன வண்முறைகளை ஊக்குவிப்பவர்களை கைது செய், ஒழிக ஒழிக பயங்கரவாதம் ஒழிக, அரசே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து என்ற வாசகங்களடங்கிய பதாகைகளை ஏந்து பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணம் முஸ்லீம் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தில் யாழ் மாவட்ட பள்ளிவாயல் நிர்வாகிகள், உலமாக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

தகவல் :- என்.எம்.அப்துல்லாஹ் - யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதி 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு