வவுனியா- ஓமந்தையில் மரத்துடன் மோதியது கார்- மூவர் படுகாயம்!

ஆசிரியர் - Admin
வவுனியா- ஓமந்தையில் மரத்துடன் மோதியது கார்- மூவர் படுகாயம்!

வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார், ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.     

இவ் விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு