25 தொடக்கம் 30 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறாா்கள்..! 8 நாடுகளின் புலனாய்வு பிாிவுகள் தேடுதலில். ஜனாதிபதி வெளியிட்ட அதிா்ச்சி செய்தி.

ஆசிரியர் - Editor I
25 தொடக்கம் 30 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறாா்கள்..! 8 நாடுகளின் புலனாய்வு பிாிவுகள் தேடுதலில். ஜனாதிபதி வெளியிட்ட அதிா்ச்சி செய்தி.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் தொடா்புடைய 25 தொடக்கம் 30 போ் இலங்கைக்குள் பதுங்கியிருப்பதாக கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தீவிரவாதிகளை முற்றாக ஒழிக்கும் வரை பாதுகாப்பு படைகளின் பணிகள் தொடரும் எனவும் கூறியுள்ளாா். 

இந்தியா ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வழங்கிய செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 பேருக்கும் மேல் உயிரிழந்தனர். அவர்களில் 42 பேர் வெளிநாட்டவர்கள்.

இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை  ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை இப்போது கைதுகளையும் செய்துள்ளோம். எனினும் மேலும் 25-30 பேர் வெளியில் உள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வு உதவிகளை அமெரிக்காவின் எஃப்ஐபி உள்ளிட்ட 8 நாடுகளின் புலனாய்வுத் துறையினர் வழங்குகின்றனர்.

இந்தத் தாக்குதல்களால் ஜனாதிபதித் தேர்தல் ஒருபோதும் ஒத்திவைக்கப்படாது. அதனை நவம்பர் 10 அல்லது டிசெம்பர் 10ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்படுள்ளது” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு