50 போ் கொண்ட தீவிரவாதிகள் குழு இலங்கை்குள் நுழைவு..!
துருக்கி நாட்டில் ஆயுத பயிற்றி பெற்ற 50 தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்துவிட்டதாக கொழும்பு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஒருவரை மேற்கோள்காட்டியே இந்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
2 வருடங்களுக்கு முன்னர் FETO என்ற 50 தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது.
FETO எனப்படும் துருக்கி தேசிய தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 50 தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் துருக்கி தூதரகத்தினால்,
இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் இந்த தகவல் பரிமாற்றம் இடம்பெற்றதாக அப்போது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
துருக்கியில் செயற்பட்ட தீவிரவாதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக துருக்கி தூதுவர் 2017 - 2018 ஆகிய ஆண்டுகளில் 4 முறை அறிவித்துள்ளார். தான் அதற்காக அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளின் ஊடுறுவல் குறித்து தீவிர விசாரணை செய்வதாகவும் , அது தொடர்பில் பாதுகாப்பு சபைக்கு விசாரணை அறிக்கை செல்லும் என பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சிற்கு கடிதம் மூலம் அறிவித்ததாக வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டார்.
எனினும், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக அந்த சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது என தூதுவர் இறுதியாக பாதுகாப்பு அமைச்சிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலம் வாய்ந்த மேற்கத்தேய நாடொன்று எம் மீது கோபமடையும். அந்த நாட்டிலிருந்து அழுத்தம் காணப்படுகின்றமையால் இவர்களை தடை செய்ய வேண்டாம் என வௌிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கூறினார்.
தூதுவர் கூறும் வகையில், பலர் பாடசாலைகளில் இருந்தனர். மதராசாவூடாக பிள்ளைகளை மூளைச்சலவை செய்யும் வகையில் பிரிவினைவாத கருத்துக்களை முன்வைப்பதாக அவர் அன்றே கூறியிருந்தார் என வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னரும் துருக்கி தூதரகத்தினால் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் FETO எனப்படும் Fethullah அமைப்பின் தீவிரவாதிகள் 50 பேரின் கடவுச்சீட்டு இலக்கம் உட்பட குறித்த இரகசிய ஆவணத்தில் காணப்பட்டதாக அவர் கூறியுயள்ளார்.