அக்குறாணை பகுதியில் தொடா் தேடுதல்..! 25 போ் கைது, துப்பாக்கி மற்றும் பெருமளவு போலி ஆவணங்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
அக்குறாணை பகுதியில் தொடா் தேடுதல்..! 25 போ் கைது, துப்பாக்கி மற்றும் பெருமளவு போலி ஆவணங்கள் மீட்பு.

அக்குறணை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தின் 11வது படையணி இன்று காலை தொடக்கம் மாலை வரை நடாத்திய சுற்றிவளைப்பு சோதனையில் துப்பாக்கி மற்றும் பெருமளவு போலி ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 25 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பிரதேசம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, துப்பாக்கியொன்று, போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு தொகை வாகன இலக்கத்தகடுகள், ஒரு தொகை பிறப்புச்சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றும் 

அவர்களிடம் இருந்து பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.அத்துடன், இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் ஒரு தொகை ஊசிகளும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அவை இலங்கையின் வைத்தியர்கள் பயன்படுத்தாத ஊசிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த நோக்கத்திற்காக இவை கொணரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அத்துடன், குண்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 150 Circuit Breaker-உம் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறினர்.

அக்குரணை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இதன்போது ஒரு தொகை இறுவெட்டுகள், 4 கெமராக்கள், ஒரு தொகை துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்ட சில பொருட்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு