மஹிந்த அரசாங்கத்தினால் ஊதியம் வழங்கி உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய பயங்கரவாதம்..! 1 மாதத்திற்குள் அம்பலப்படுத்துவோம்.
தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னணியில் உள்ள முக்கிமானவா்களை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் சுகாதார அமைப்பா் ராஜிதசேனாரத்ன கூறியுள்ளாா்.
அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்கள் 2015ஆம் ஆண்டுக்கு பிறகே வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடும் எதிர்தரப்பினர்
கடந்த காலத்தில் இடம் பெற்ற செயற்பாடுகளையும் மீட்டிப்பார்க்க வேண்டும். சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய இவ்வாறான அமைப்புக்கள் குறுகிய காலத்திற்குள் வளர்ச்சியடையவில்லை.
தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலே உருவாக்கப்பட்டன.
தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்கள் ஷரி-யா சட்டமூலத்திற்கு அமைய செயற்பட ஆரம்பித்தன.
2013ஆம் ஆண்டு மே. மாதம் 13ம் திகதி ஷரி-யா சட்டமூலத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் நடைமுறையில் உள்ள
சட்டங்களை உள்ளடக்கியதாக ஷரி- யா சட்டமூலம் காணப்பட்டது. இச்சட்டம் அடிப்படைவாத கொள்கைகளை கொண்டிருந்தமையினை ஏன் அப்போது பொறுப்பில் இருந்தவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இச்சட்டத்தின் ஊடாகவே அரபுக் கல்லூரிகளும், தனி முஸ்லிம் கற்கை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சட்ட மூலத்தின் அடிப்படையிலே இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்பட்டன. கடந்த அரசாங்கத்தில் மாத்திரம் இச்சட்டத்தை ஆதாரமாகக் கொண்டு
200 பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினை குறிப்பிடுவது அவசியம். 2015ஆம் ஆண்டுக்கு பிறகு எவ்வித அமைப்புக்களும்,
பள்ளிவாசல்களும் ஷரி- யா சட்டத்தின் ஊடாக அமைக்கப்படவில்லை.அரச புலனாய்வு பிரிவினரை தேசிய அரசாங்கம் பலவீனப்படுத்தியதாக குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு பதவியை துஸ்பிரயோகம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள். தேசிய தவ்ஹீத் அமைப்பில் பணி புரிந்த 26 பேருக்கு 2009ஆம் ஆண்டுக்கு பிறகு சம்பளம் அவசியம்
இல்லாமலே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக செயற்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகளுடன் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,
உதய கம்மன்பில, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பு கொண்டுள்ளமையை புகைப்பட ஆதாரங்களின் ஊடாக அறிய முடிகின்றது.
இவர்கள் அனைவரும் சிங்கள அடிப்படைவாதிகள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் தூரநோக்கமற்றவை.
இவர்கள் பொறுப்பற்ற விதத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகளின் விளைவினையே தற்போது எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.
தற்போது ஒன்றும் அறியாதவர்கள் போல் கருத்துக்களை வெளியிடுவதால் எவ்வித உண்மைகளையும் மறைக்க முடியாது. அடிப்படைவாத அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக
அரசாங்கம் செயற்படும் போது அவர்கள் ஷரி-யா சட்டத்தை தமது கேடயமாக பாதுகாத்தனர். 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியை
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.