SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு!

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேரில் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க அவரிடம் தமது பிள்ளைகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஹரி ஆனந்தசங்கரி. காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக தான் இன்று இங்கு வந்ததாகவும், கடந்த காலங்களை போன்றே காணப்படுவதாகவும், எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கைக்கு வந்த தான் கனேடிய உயர்ஸ்தானிகருடன் தங்க கிடைத்ததாகவும், அதன் விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இலங்கை பிரச்சினை விடயம் தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பது தொடர்பிலும் அவர் இதன்போது தெரிவித்தார்.