தமிழ் மக்களின் காணிகளை பறித்து இராணுவத்திற்கு கொடுங்கள், அரச அதிகாாிகளுக்கு மஹிந்த அச்சுறுத்தல்..
கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடந்த 51 நாள் அதிகாரத்தில் இருந்த மகிந்த அணி வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கையை முடக்கி விட்டுள்ளமை இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இராணுவத்தினர் நடத்தும் தல்செவன ஹொட்டல், கடற்படையினர் நடத்தும் கார்பர்வியூ ஹொட்டல் என்பவற்றுக்கான காணிகளை சுவீகரித்து பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குமாறு மகிந்த அணியினர் அழுத்தம் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் சூழ்சியின் ஊடாக ஆட்சிப்பீடமேறி யது மகிந்த அணி. அவர்களது காலத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அரச அலுவ லர்களை நாடாளுமன்ற துறைசார் குழுக் கூட்டங்களுக்கு அழைத்துள்ளனர்.
கார்பர் வியூ ஹோட்டலுக்குரிய காணியை கடற்படையினருக்கும், தல்செவன ஹோட்டலுக்குரிய காணியை இராணுவத்தினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே அழுத்தம் கொடுத் துள்ளார்.
அதற்குரிய நடவடிக்கைகள் அரச அதிகரிகளால் எடுக்கப்பட்டிருக்காத நிலையில், நாடாளுமன்ற துறைசார் குழுக் கூட்டத்துக்கு மாவட்ட அதிகாரிகளை மீளவும் அழைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே. காணிகளை பாதுகாப் புத் தரப்பினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை
திட்டித் தீர்த்து எச்சரித்துள்ளார். இதனையடுத்து காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயத் திணைக்களம், உணவு களஞ்சி யம், கே.கே.எஸ். ஆங்கில மகாவித்தியாலயம் என்பவற்றுக்கும்
மற்றும் தனியார் சில ருக்கும் சொந்தமான காணிகளையும் உள்ளடக்கியே தல்செ வன ஹோட்டல் அமைந் துள்ளது. அந்தக் காணிகளைச் சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளாக இருப்பதால்
அவற்றை பாதுகாப்பு அமைச்சுக்கு பாரப்படுத்தும் நடவடிக்கையை காணி அமைச்சே முன்னெடுக்கவேண்டும். இதற்குரிய ஆலோசனைகளைக் கோரி, காணி அமைச்சுக்கு யாழ்ப்பாண மாவட்ட அதிகாரிகளால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது