இன்று உயா்மட்ட கலந்துரையாடல், இப்போதாவது பேசுமா கூட்டமைப்பு..?
யாழ்.வலிகாமம் வடக்கில் கடற்படைமுகாம் அமைப்பதற்கு காணி சுவீகாிப்பதற்கு எ டுக்கப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அது தொடா்பில் இறுதி தீா் மானத்தை எடுப்பதற்காக இன்று காலை கொழும்பில் அவசர கூட்டம் இடம்பெறவிரு க்கின்றது.
காணி சுவீகரிப்பு நடவடிக்கையை நிரந்தரமாகக் கைவிடுவதா, அல்லது மாற்று வழி களை முன்னெடுப்பதா என்பது தொடர்பில் காணி அமைச்சில் இடம்பெறும் அவசரக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. வலி. வடக்கில் ஜே/226, ஜே/233, ஜே/234 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 232 ஏக்கர்
காணிகளை கடற்படையின் முகாம் அமைப்பதற்கும், சுற்றுலா அதிகார சபைக்கும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகிந்த அரசின் காலத்தில், நகுலேஸ்வரத்தில் ஆடம்பர விடுதி அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த விடுதியை வழங்குமாறு வடக்கு மாகாணசபை கோரியிருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கோரியிருந்தது. இறுதியில் சுற்றுலா அதிகார சபைக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். சுற்றுலா அதிகார சபைக்கு அந்த மாளிகை அதனோடு இணைந்த 62 ஏக்கர் நிலப் பரப்பை சுவீ கரிப்பதற்கு அரச தலைவர் நடவடிக்கை எடுக்கப் பணித்திருந்தார்.
இதனையடுத்து கடற்படையினர் தமது முகாமை அந்தப் பகுதியில் அமைப்பதற்கு 160 ஏக்கர்களைச் சுவீகரிக்கக் கோரியுள்ளனர். கோயில், மடம், சிமெந்துக் கூட்டுத்தாப னம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 232 காணிகளை சுவீகரிப்பதற்காக இன்று அளவீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இதனையடுத்து காணி சுவீகரிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.