சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்திட்டம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பம். முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு.

ஆசிரியர் - Admin
சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்திட்டம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பம். முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு.

சுமார் 3 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோக திட்டம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் நேற்று (14) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார். 

இத் திட்டத்தை பீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் கீழ் உள்ள சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு ஆகியன இணைந்து இந்தக் குடி தண்ணீர் விநியோக திட்டத்தினை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளனர். 

இத் திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களும், பொது மக்களும் தமது அன்றாட குடி தண்ணீர் தேவைக்கான தண்ணீரை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு