SuperTopAds

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பில் ஒருமித்த கருத்து, சந்திப்பு சுமுகம்..

ஆசிரியர் - Editor I
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பில் ஒருமித்த கருத்து, சந்திப்பு சுமுகம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. இந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான கருத்து பாிமாற்றம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

இந்த சந்திப்பின் பின்னா் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிா்க் கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் ஊடகங்களுடன் பேசியபோது,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய 

மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை வழங்கும். அதிகார பகிர்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கைகளுக்கு 

ஜே.வி.பி.யினர் முழுமையான ஆதரவு நல்குவதாக குறிப்பிட்டுள்ளமை திருப்தி கரமானது என்றார். இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், 

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, த.சித்தார் த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, 

ரில்வின் சில்வா மற்றும் கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.