SuperTopAds

சப்ரகமுவவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குழாய் மூலம் குடிநீர்!

ஆசிரியர் - Admin
சப்ரகமுவவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குழாய் மூலம் குடிநீர்!

சப்ரகமுவ மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குழாய் மூலம் குடி நீரைக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

“சப்ரகமுவ மாகாணத்திலிருந்து நிலத்திற்கு அடியில் குழாயைப் பதித்து, நீரைக் கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.