SuperTopAds

யாழில். கனடா கல்விக் கண்காட்சி

ஆசிரியர் - Editor II
யாழில். கனடா கல்விக் கண்காட்சி

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி விருந்தினர் விடுதியில், எதிர்வரும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கண்காட்சி தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பட்டுக்குழுவினர் கூறுகையில்,

வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன.

இதில் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்களுள்ளதுடன் துறைசார் காள்விகளுக்கும் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது என தெரிவித்தனர்.