SuperTopAds

யாழ் பலாலி வீதி கந்தர்மடத்தில் கோர விபத்து…! மயிரிழையில் உயிர் தப்பிய பயணி..!!

ஆசிரியர் - Admin
யாழ் பலாலி வீதி கந்தர்மடத்தில் கோர விபத்து…! மயிரிழையில் உயிர் தப்பிய பயணி..!!

யாழ் பலாலி வீதி கந்தர் மடத்தில் இன்று மாலை கோர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகர் பக்கம் இருந்து வந்த தனியாருக்கு சொந்தமான பேரூந்து ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதி கோர விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த சம்பவத்தில் சிங்கள சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்த அரைச் சொகுசுப் பேரூந்துடன் வீதிக்கு குறுக்காக வந்து பிரதான வீதியில் திரும்புவதற்கு முயன்ற உந்துருளியே விபத்துக்கு உள்ளானது.

வடக்கில் இவ்வாறான தேவையற்ற விபத்துச் ச ம்பவங்கள் இடம்பெறுவது சாதாரண நிகழ்வாகி விட்டது. அதிவேகமும், கவனக்குறைவும், மதுபோதைகளும் அதிகரித்து விட்ட வடக்கில், இவ்வாறான விபத்துக்களை கட்டுப்படுத்துவது என்பது சிரமமே.