ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா - ஐசிசி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தல்

ஆசிரியர் - Admin
ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா - ஐசிசி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். 

இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின்போது ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்தனர்.

இந்நிலையில், ராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குரேஷி கூறுகையில், தன்னுடைய சொந்த தொப்பிக்கு பதிலாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய அணி விளையாடியதை உலகமே பார்த்தது. ஐசிசி பார்க்கவில்லையா?. ஐசிசி தானாக முன் வந்து இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Radio
×