நியூசிலாந்து- வங்காளதேசம் டெஸ்ட் - 2-வது நாள் ஆட்டம் ரத்து

ஆசிரியர் - Admin
நியூசிலாந்து- வங்காளதேசம் டெஸ்ட் - 2-வது நாள் ஆட்டம் ரத்து

வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்ட் தொடரில் ஹேமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்னில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதே போல இன்றைய 2-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் நாளைய ஆட்டம் 30 நிமிடம் முன்னதாக தொடங்கும்.

Radio
×