மதுபான பிாியா்களுக்கும், இனிப்பு பிாியா்களுக்கும் இது சோதனைக்காலம், வெப்ப அதிகாிப்பு குறித்து அரசு எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
மதுபான பிாியா்களுக்கும், இனிப்பு பிாியா்களுக்கும் இது சோதனைக்காலம், வெப்ப அதிகாிப்பு குறித்து அரசு எச்சாிக்கை..

இலங்கையில் சமகாலத்தில் கடுமையான வெப்ப அதிகாிப்பு காணப்படுவதனால் உடல் ஆரோக்கிய சீா்கேடுகள் உருவாகலாம். என மத்திய சுகாதார அமைச்சு எச் சாிக்கை செய்துள்ளது. 

மேலும் உடல் ஆரோக்கிய சீா்கேடுகளில் இருந்து பாதுகாப்பாக நடந்து கொள்வதற் கான ஆலோசனைகளையும் மத்திய சுகாதார அமைச்சு வழங்கியிருக்கின்றது. இ தன்படி, உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன்கூடிய 

இலேசான ஆடைகளை அணிவது சிறப்பானது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகையில் சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தினந்தோறும் குளிப்பது பொருத்தமானது 

என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் திறந்த வெளிகளில் விளையாடுவதைத் தவிர்ப்பது நல்லது. 

கூடுதலான வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தனியே வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இனிப்பும், மதுசாரமும் செறிந்த பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு